தமிழில் வெளியான 'அபியும் நானும்', 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படங்களை தயாரித்தவர் 'தில்' ராஜூ. 2003ஆம் ஆண்டு தெலுங்கில் 'தில்' என்னும் படத்தை முதன் முதலில் தயாரித்ததால் 'தில்' ராஜூ என்று அழைக்கப்படுகிறார். முன்னணி நாயகன் படங்கள் மட்டுமல்லாது வித்தயாசமான கதைகள் கொண்ட பல சிறு பட்ஜெட் படங்களை ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். தமிழில் வெளியான '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' படத்தை தயாரித்திருந்தார். 'பிங்க்' தெலுங்கு ரீமேகான 'லாயர் சாப்' படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.
2017 ஆம் ஆண்டு இவருடைய முதல் மனைவி அனிதா மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியின் மரணத்திற்கு பின் தனியாக வசித்து வந்தார். சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் இவரது இரண்டாவது திருமணம் குறித்து பல வதந்திகள் பரவின.