தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசுரனுக்கு தேசிய விருது - வெற்றிமாறனை வாழ்த்திய தயாரிப்பாளர் தாணு - தயாரிப்பாளர் தாணு

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்துக்குப் பிறகு அவரது சீடர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்காக எனது நிறுவனம் தயாரித்த படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

Producer dhanu wishes director vetrimaran
வெற்றிமாறனை ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்திய தயாரிப்பாளர் தாணு

By

Published : Mar 23, 2021, 2:24 PM IST

சென்னை:அசுரன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

67ஆவது தேசிய விருதுகளில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அசுரன் படத்துக்கு சிறந்த படம், படத்தின் கதாநாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அசுரன் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறனை ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்திய தயாரிப்பாளர் தாணு

அசுரன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, படத்தின் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதன் பின்னர் அவர் கூறியதாவது:

30 ஆண்டுகளுக்கு முன் எனது தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது அவரது சீடன் இயக்கிய படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளதாக எனத் தெரிவித்தார்.

அசுரன் பட இயக்குநர் வெற்றிமாறனை வாழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் தாணு

இதையும் படிங்க: இந்தாண்டு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன - விஷ்ணு விஷால்

ABOUT THE AUTHOR

...view details