'பூ', 'ராமன் தேடிய சீதை', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த தனஞ்செயனின் 59 வயதுடைய சகோதரர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டவர் தயாரிப்பாளர் தனஞ்செயன். இவர் 'பூ', 'ராமன் தேடிய சீதை', 'கண்டேன் காதலை' போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது 59 வயதான சகோதரர் சமீபத்தில் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்து ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா தொற்று என் அன்பான அண்ணனை எடுத்துக்கொண்டது. அவர் 59 வயதிலும் ஆரோக்கியமாக இருந்தார், ஆனால் ஐந்தே நாள்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
அவரது மனைவியும், மகனும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் சிலர் உயிரிழந்துவருகின்றனர். நாம் ஒரு அதிர்ச்சியான நிலையில் இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் மக்கள் இந்த நோயின் கொடிய தன்மை குறித்து விழிப்புணர்வு அடையவே அந்தப் பதிவைப் பகிர்ந்ததாக தனஞ்செயன் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட தனது சகோதரனின் குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்குப் திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க...ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடிகர் அஜித்தின் தக்ஷா குழு!