உலகம் முழுவதும் இருந்த கடுமையான லாக்டவுன் மற்றும் நோய்த்தொற்று நெருக்கடி காலத்திலும், நடிகர் அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுவதும் 'வலிமை' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜித்குமாரின் கண்கவர் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி ஆக்சன் ஆகியவை படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
4 மொழிகளில் வெளியாகிறது
இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், "வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரம்மாண்ட வெளியீடுகளின் தொடங்கமாக இருக்கும்.
இத்திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித்குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு குடும்பத்தைப் போல உழைத்துள்ளோம்
அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.