சென்னை: அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். இதில் தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி தயாரித்துள்ளார். இவரே இப்படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
'மாயோன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை சிபிராஜ் கொடுத்து முடித்தார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான அருண்மொழி கூறியதாவது, திரைக்கதை எழுத்தாளராக, மாயோனுடனான எனது பயணம், ஒரு தனித்துவமான, சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது.