1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' உருவாகிவருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில், நடிகர்கள் கமல், சித்தார்த், நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, நெடுமுடிவேனு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜாம்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.