தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#vaathistepu: 'வாத்தி கமிங்' பாட்டின் ஸ்டப்பை அறிமுகப்படுத்திய 'மாஸ்டர்' அனிருத் - மாஸ்டர் வாத்தி கம்மிங் ஒத்து

'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கமிங்' பாடல் ஸ்டெப் சேலஞ்ச் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார்.

master
master

By

Published : Mar 12, 2020, 12:14 PM IST

விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'வாத்தி கமிங்' மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

லோக்கலான வரிகளில், லோக்கல் குத்தாக அமைந்திருக்கும் 'வாத்தி கமிங்' பாடலை இசையமைப்பாளர் அனிருத், கானா பாலசந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலை எழுதியிருப்பதும் கானா பாலசந்தர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் தோன்றி நடனமாடுவதும், பாடல் உருவான விதத்தையும் காட்சிகளாக இணைத்துள்ளனர். அத்துடன் விஜய்யின் நடனம் அடங்கிய ஸ்டில்களும் இப்பாடலில் இடம்பெறுகின்றன.

'மாஸ்டர்' படத்தில் பேராசிரியராகத் தளபதி விஜய் நடித்துள்ள நிலையில், அவரது வருகையை முன்னிட்டு இந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

மேலும், கொண்டாட்ட பாடலாக அமைந்திருக்கும் இதில் விஜய்யின் வெயிட்டான நடனமும் அமைந்திருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வரை இப்பாட்டத்தின் லிரிக்கல் காணொலியை ஏழு மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இப்பாட்டின் லிரிக்கல் காணொலியில் இசையமைப்பாளர் அனிருத் தோன்றி அவர் போட்ட ஸ்டெப் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனையடுத்து அனிருத் தனது சமூக வலைதளத்தில் #vaathistepu என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கியுள்ளார்.

இதில் ரசிகர்கள் தங்களது நடன ஸ்டெப்பை இதில் பதிவிடுங்கள் என்று கூறி, தனது நண்பர்களுடன் அனிருத் வாத்தி ஸ்டெப்புக்கு நடனமாடிய காணொலியைப் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்தக் காணொலி வெளியான சில நிமிடங்களில் ரசிகர்கள் தங்களின் #vaathistepu நடனத்தைப் பதிவிட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details