தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரியங்கா சோப்ராவின் 'மேட்ரிக்ஸ் 4': வெளியாகும் தேதி அறிவிப்பு - மேட்ரிக்ஸ்

ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடித்துவரும் 'மேட்ரிக்ஸ் 4' படம் வெளியாகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

v
v

By

Published : Nov 23, 2021, 1:52 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் நடிப்பில், 1999ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ’தி மேட்ரிக்ஸ்’. இப்படத்தை லானா வக்காவ்ஸ்கி, லில்லி வக்காவ்ஸ்கி என்னும் சகோதரிகள் இயக்கினார்.

உலகளவில், தொழில்நுட்ப ரீதியிலான படங்களில் புதிய புரட்சியை ’தி மேட்ரிக்ஸ்’ ஏற்படுத்தியது. மேட்ரிக்ஸ் படங்களின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் 2003ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பெரும் ரசிகர்களைக் கவர்ந்தது.

மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகம் ஏற்குறைய 17 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாகியுள்ளது. மேட்ரிக்ஸ் படத்தை இயக்கிய சகோதரிகளில் ஒருவரான லானா வக்காவ்ஸ்கி மேட்ரிக்ஸ் நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார்.

இதில் கியானு ரீவ்ஸ் நாயகனாக நடிக்க பிரியங்கா சோப்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் மேட்ரிக்ஸ் சீரிஸின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் கேரி அன்னே மோஸ், நீல் பேட்ரிக் ஹேரிஸ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தி மேட்ரிக்ஸ் - 4, டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: கணவர் பெயர் நீக்கம் - நிக் ஜோனஸை பிரியும் பிரியங்கா?

ABOUT THE AUTHOR

...view details