தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா சோப்ரா உதவி! - Latest cinema news

நடிகை பிரியங்கா சோப்ரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

By

Published : Jul 28, 2020, 8:43 PM IST

கடந்த ஒரு வாரமாக டெல்லி, அஸ்ஸாம், பிகார் மற்றும் உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனஸ் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்.

இது குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன். நீங்களும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒரு சில அமைப்புகளுக்கு நன்கொடை பெற்று உதவி செய்கின்றனர்.

அவர்களை தொடர்பு கொண்டு நீங்களும் உதவி செய்யுமாறு எனது ரசிகர்களிடம் கேட்டுகொள்கிறேன். அவர்களுக்கு நமது உதவி தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details