பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகிகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். ஹாலிவுட் பக்கம் சென்ற பிரியங்கா சோப்ரா, பிரபல பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பிறகு அவ்வப்போது தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். சமீபத்தில் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே தனது கனவு என்று கூறிய பிரியங்கா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனம் ஆடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், சினிமா ரசிகர்கள் பிரியங்கா மீது மதச்சாயம் பூசி ட்ரோல் செய்துவருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் இதுதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பிரியங்கா சோப்ரா, கணவர் நிக் ஜோன்ஸுடன் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கறுப்புக் கோட் காக்கி ஷார்ட்ஸ் அணிந்து நடந்து செல்லும் புகைப்படம் வலைதளத்தில் வைரலானது. தற்போது இந்தப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் காக்கி ஷார்ட்சை வைத்து அவர் ஆர்எஸ்எஸ்-இல் இணைந்துவிட்டதாகக் கூறிவருகின்றனர்.