சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது 37ஆவது பிறந்தநாளை கணவர் நிக் ஜோன்ஸ் உடன் மியாமியில் உற்சாகமாகக் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டது. அதில் பிரியங்கா சோப்ரா சிகரெட் பிடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியது.
இப்படம் தற்போது ரசிகர்களால் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ட்வீட்டரில் #priyankachopra என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.