தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிணைந்த பிரபலங்கள் - நிக் ஜோன்ஸ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் பெண் நட்சத்திரங்கள் ஒன்றுகூடி எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

File pic

By

Published : May 20, 2019, 10:34 AM IST

சர்வதேச அளவில் திரைப்பட விருதுகளில் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்சில் தற்போது நடைபெற்று வருகிறது.

72ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் திரைப்படத்துறை சார்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதும் உரிய அழைப்பு இருந்தால் மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய முடியும்.
கேன்ஸ் விழாவில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்களுடன், குறும்படம், ஆவணப்படங்களும் போட்டியிடுவது பாரம்பரியமான ஒன்றாகும். சிறந்த படத்திற்கு "GOLDEN PALM AWARD" எனப்படும் தங்கப் பனை விருது வழங்கப்படுகிறது. அத்துடன், சிறந்த இயக்குநர், கதாசிரியர், நடிகர், நடிகை உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகைகள், பல்வேறு புதுமையான ஆடைகளில் பவனி வருவதைக் காண உலக ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

நிக் ஜோன் உடன் பாலிவுட் பிரபலங்கள்

இந்நிலையில் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ஹீனா கான், ஹுமா குரேஷி, டயானா பென்ட்டி ஆகியோர் பிரியங்காவின் கணவர் நிக் ஜோன்ஸ் உடன் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது.

இவ்விழாவில் விருது பெறும் பெரும்பான்மை படங்கள் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details