சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அளித்துள்ளார் நடிகை பிரியாமணி.
தென்னிந்திய சினிமாக்களில் கலக்கி வந்த பிரியாமணி திருமணம் செய்துகொண்ட பின்பு இடையில் காணாமல் போயிருந்தார். இதையடுத்து, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் மூலம் மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய அவர், தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஜூன் 4) பிறந்தநாள் கொண்டாடும் பிரியாமணி ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக தற்போது அவர் நடித்து வரும் இரண்டு முக்கியமான படங்களின் போஸ்டரும், அவரது கேரக்டர் லுக்கும் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் தனுஷ் நடிப்பில் சூப்பர்ஹிட்டான 'அசுரன்' தெலுங்கு ரீமேக்காக உருவாகி வரும் ‘நாரப்பா’ படத்தில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்கிறார் பிரியாமணி.