தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் பிரியா வாரியர் திரைப்படம் - பிரியா வாரியர்

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'நல்பத்துகாரன்டே இருபத்தியொன்னுகாரி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட வெளியீட்டுக்காக படக்குழு முன்னணி ஓடிடி தள நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம்.

Nalpathukaarante Irupathiyonnukaari to release on OTT
Nalpathukaarante Irupathiyonnukaari to release on OTT

By

Published : Aug 2, 2020, 10:45 AM IST

2017ஆம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் புருவத்தை தூக்கி ரொமான்ஸ் லுக் விட்டு, அதன்மூலம் மிகவும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

நடிகை பிரியா வாரியர் தற்போது 'நல்பத்துகாரன்டே இருபத்தியொன்னுகாரி' என்னும் திரைப்படத்தில் தான் நடிப்பதாக அறிவிப்பு விடுத்திருந்தார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் வி.கே. பிரகாஷ் இயக்குகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அனுப் மேனன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 41 வயது ஆண், 21 வயது பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள சிக்மங்களூர் என்னும் இடத்தில் கதை நடப்பதுபோல் அமைந்துள்ளது.

தற்சமயம் கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இந்தத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து முன்னணி ஓடிடி தளங்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இதையும் படிங்க... 'இமையழகி' பிரியா வாரியரின் கலக்கல் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details