தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...எதுவும் நிச்சயமில்லை' - நடிகை பிரியா பவானி சங்கர் - நடிகை பிரியா பவானி சங்கர் லேட்டஸ் செய்திகள்

சென்னை: கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் தான் நடிப்பது குறித்தான சமூகவலைதள வதந்திகளுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

By

Published : May 24, 2021, 10:30 PM IST

ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான 'அடங்க மறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கூடிய இயக்குநராக மாறியவர் கார்த்திக் தங்கவேல். இந்தப் படத்திற்கு பின் கார்த்திக் தங்கவேல் அடுத்ததாக விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்தான எந்த முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், " எதையும் நான் உறுதிசெய்யவில்லை. அதற்கு நான் சரியான ஆள் கிடையாது. எதுகுறித்தும் விவாதிக்கும் நிலையில் இல்லை. சகஜ நிலை திரும்பி எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது அந்தப் படத்தை ஒரு ரசிகையாகவோ அல்லது அந்தப் படத்தில் நடிக்கும் நடிகையாகவும் அதை ரசிப்பேன். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதுவும் நிச்சயமில்லை. தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை - பிரியா பவானி சங்கர்

ABOUT THE AUTHOR

...view details