தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நம் நம்பிக்கை நம்மை நம்ப வைக்கிறது - பிரியா அட்லியின் வைரல் புகைப்படம்! - விஜய்

நடிகை பிரியா அட்லி யோகா ஆசிரியருடன் யோகா பயிற்சி செய்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

priya

By

Published : Oct 8, 2019, 11:37 PM IST

தமிழில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி பின் விஜயை வைத்து, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

அட்லியும் 'சிங்கம்' 'நான் மகான் அல்ல' உள்ளிட்ட படத்தில் நடித்த பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் காதல் மழை பொழியும் புகைப்படங்களை பதிவு செய்வார்கள். சமீபத்தில் அட்லியின் பிறந்தநாளை பிரியா கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

யோகாசன சாகசம் செய்யும் பிரியா

இந்நிலையில், பிரியா தனது யோகா ஆசிரியர் பாதங்களில் சாய்ந்தபடி அந்திரத்தில் யோகா செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் புகைப்படத்திற்கு சிரித்தபடி நல்ல போஸ் கொடுக்கும் வரை ஆசிரியர் என்னை யோகா செய்யவிடமாட்டார். நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன். நம் மீதுள்ள நம்பிக்கை உண்மையில் நம்மை நம்ப வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

யோகாசன சாகசம் செய்யும் பிரியா

இதையும் வாசிங்க: 'பிகில்' படத்தின் பட்ஜெட் இவ்வளவா?' - அதிர்ந்த கோலிவுட் வட்டாரம்!

ABOUT THE AUTHOR

...view details