தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
'பிகில்' இயக்குநரின் மனைவியை சிறப்பித்த படத்தின் தயாரிப்பாளர்! - பிகில் அப்டேட்
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குநரின் மனைவிக்கு கிஃப்ட் வழங்கியுள்ளது.
மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி விருந்தாக நாளை (அக்.25 ) இப்படம் வெளியாகிறது.
இதனையடுத்து, இப்படத்தின் இயக்குநர் அட்லியின் மனைவியும் நடிகையுமான ப்ரியாவிற்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விஜய் படம் பிரிண்ட் செய்யப்பட்ட மொபைல் கவர், டி-சர்ட் உள்ளிட்ட கிஃப்ட்களை வழங்கியுள்ளது. இதனைத் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப்ரியா ஏஜிஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.