நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த 'வாமனன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை ப்ரியா ஆனந்த். அதன் பின் 'வணக்கம் சென்னை', 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', 'எதிர்நீச்சல்', 'ஆதித்ய வர்மா', 'எல்கேஜி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதனையடுத்து தற்போது ப்ரியா ஆனந்த், 'ஈட்டி', 'ஐங்கரன்' ஆகியப் படங்களை இயக்கிய ரவிராசு இயக்கும் கன்னட படத்தில் நடிக்கிறார். 'சிவாணா 123' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை போடப்பட்டது.