மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான பரித்விராஜ், தற்போது தான் இயக்கி வரும் இரண்டாவது படமான 'ப்ரோ டாடி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய முதல் படமான 'லூசிபர்' பெரும் வெற்றி பெற்றது. ஆக்சன் படமான லூசிபரில் மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
இந்நிலையில், மனு வாரியர் இயக்கத்தில் பிரித்விராஜ், மேத்யூ, ஸ்ரிண்டா, முரளி கோபி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'குருதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஆக.04) வெளியாகிறது. இதனை பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.