கறுப்பு உடையில் 'ஆடு ஜீவிதம்' பிரித்திவிராஜ் உடற்பயிற்சி - பிரித்விராஜ்
நடிகர் பிரித்திவிராஜ் வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பிளெஸ்ஸியின் 'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டிற்குச் சென்ற பிரித்திவிராஜ், கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கு சிக்கிக்கொண்டார். அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது நிலை குறித்தும் படக்குழுவினரின் நிலை குறித்தும் பதிவிட்டு வந்தார்.
மே மாதம் இறுதியில் கொச்சி திரும்பிய அவர், இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதியானது. இறுதியாக கடந்த வாரம் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்தார்.
தற்போது வீட்டிலிருக்கும் பிரித்திவிராஜ் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கண்ணாடியின் முன்பு கறுப்பு ஜிம்வேர் அணிந்திருக்கும் பிரித்திவிராஜ், ஜிம் கருவிகளையும் காட்டியுள்ளார்.