தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சச்சி நினைவு நாள்: மனமுடைந்த பிருத்விராஜ் - சச்சி நினைவு நாள்

சச்சி, நடிகர் பிருத்விராஜின் நெருங்கிய நண்பர் ஆவார். சாக்லேட், ராபின்ஹூட், டிரைவிங் லைசன்ஸ் என இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Prithviraj Sukumaran remembering sachy
Prithviraj Sukumaran remembering sachy

By

Published : Jun 18, 2021, 4:44 PM IST

மறைந்த இயக்குநர் சச்சியை நினைவுகூர்ந்து பிருத்விராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சச்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை இயக்கிய சச்சி, நடிகர் பிருத்விராஜின் நெருங்கிய நண்பர் ஆவார். சாக்லேட், ராபின்ஹூட், டிரைவிங் லைசன்ஸ் என இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக கடந்த ஆண்டு இதே நாளில் சச்சி உயிரிழந்தார்.

இன்று (ஜூன் 18) சச்சியை நினைவுகூர்ந்து பிருத்வி தனது பேஸ்புக் பக்கத்தில், அந்த சிரிப்பு, அந்த சிரிப்புகள், அந்த சிந்தனைகள், அந்தக் கதைகள், அந்த நம்பிக்கை.. சச்சியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details