நடிகர் பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து முதன்\முதலாக இயக்கிய படம் 'லூசிஃபர்'. இப்படத்தில் மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ், இந்திரஜித், விவேக் ஓபராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. 2019ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி வெளியானஇப்படம், வெளியான சில நாள்களிலேயே 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்தது.
இதன் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தையும் பிரித்விராஜே இயக்கவுள்ளார். இன்னொரு பக்கம் ’ஆடு ஜீவிதம்’, அந்தாதுன் மலையாள ரீமேக் உள்ளிட்ட படங்களிலும் அவ்ர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 'பிரோ டாடி' (Bro Daddy) என தலைப்பிடப்பிட்டுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷினி, மீனா, கன்னிகா, முரளி கோபி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.