மலையாள எழுத்தாளர் பெனியமின் எழுதிய புதினம் 'ஆடு ஜீவிதம்’ (Goat days). மலையாளத்தில் உருவான இந்தப் புதினம், ஆங்கிலம், அரபி, தமிழ், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்தப் புதினத்தை அடிப்படையாகk கொண்டு பிரித்விராஜ் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் படம் உருவாகிவருகிறது.
ஆடு ஜீவிதம் படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார் பிரித்விராஜ். வாசகர்களுக்குப் படிக்க படிக்க ஆவலை அதிகரித்த கதை என்பதால், அதன் தன்மை மாறாமல் எடுக்க விரும்புகிறது இதன் படக்குழு. அதனால் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு படம் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. தற்போது உலகப் பெருந்தொற்றான கரோனா காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.