கிராமத்து பின்னணியில் உருவாகும் கதைகளத்தில் பிரேம்ஜி, பிக்பாஸ் 3 புகழ் ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
கிராமத்து கதையில் கதாநாயகனாக பிரேம்ஜி! - கதநாயகனாக நடிக்கும் பிரேம்ஜி
விமர்சக ரீதியாக வரவேற்பைப் பெற்ற 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. கிராமத்து நீதிமன்றங்கள், போலீஸ் ஆகியோரின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் 80 வயது மதிக்கத்தக்க நடிகை மாயாக்கா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளாராம். மேலும், ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் தொடரில் தோன்றிய ஸ்வயம் சித்தா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.
ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் கலக்கிய பிரேம்ஜி மாங்கா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அதேபோல் தோழா, ஒன்பதுல குரு உள்ளிட்ட மல்டி ஹீரோ படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது கதையின் நாயகனாக 'ஒரு கிடாயின் கருணை மனு' படப் புகழ் சுரேஷ் சங்கையா இயக்கவிருக்கும் இந்தப் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.