தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் பிரேம்ஜி. இவர் தற்போது பரணி ஜெயபால் இயக்கியுள்ள, ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
பிச்சாண்டி தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.பி.பி. சரண், இயக்குநர் சரவண சுப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.