தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநராக அவதாரம் எடுக்கும் பிரேமம் நடிகர் - shabareesh varma turns as director

பிரேமம் பட நடிகர் 'சபரீஷ் வர்மா' மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இயக்குநராக அவதாரம் எடுக்கும் பிரேமம் நாயகன்!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் பிரேமம் நாயகன்!

By

Published : Jan 25, 2020, 4:31 PM IST

மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் நிவின் பாலி நண்பராக நடித்து பிரபலமானவர் சபரீஷ் வர்மா.

இவர் நடிப்பது மட்டுமின்றி, மலையாளத்தில் பாடல் பாடுவது, பாட்டு எழுதுவது என்று பன்முக திறமை கொண்டவராவார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த செய்தியை அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

அவர் இயக்கும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சபரீஷ் இயக்கும் முதல் படத்தில் அவரின் நண்பர் நிவின் பாலி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சபரீஷ் வர்மா நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள, 'Mariyam Vannu Vilakkoothi' என்ற படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இதையும் படிங்க: பிங்க் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த ஆதித்யா அருணாச்சலத்தின் மகள்

ABOUT THE AUTHOR

...view details