தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்? - பிரேமலதா விளக்கம் - மீண்டும் படங்களில் விஜயகாந்த்

விஜயகாந்த் மீண்டும் படங்களில் நடிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

பிரேமலதா
பிரேமலதா

By

Published : Dec 25, 2021, 1:43 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நடிகர் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவர் வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், "விஜயகாந்த் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் தவறானது.

அவர் கட்சிப் பணிகளைப் பார்த்துக் கொண்டே, உடற்பயிற்சியைச் செய்து ஓய்வில் இருக்கிறார். படத்தில் அவர் நடிப்பதாக இருந்தால் நாங்களே அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Jai Bhim பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தரும் முடிவை மாற்றிய லாரன்ஸ்

ABOUT THE AUTHOR

...view details