நடிகர் சல்மான் கான் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் படம் 'தபாங்-3'. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பது பலரும் அறிந்ததே. சோனாக்ஷி சின்ஹாவோடு மஹி கில்லும் நடிக்கிறார். படத்தின் புரமோஷன் வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகை பிரீத்தி ஜிந்தா, 'ஹாலோவின்' கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டார்.
அதில் கரு நீல போலீஸ் உடை அணிந்திருந்த பிரீத்தி, சல்மான் கானுடன் கெத்தாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து வரவிருக்கும் 'தபாங்-3'இல் பிரீத்தி கௌரவ வேடத்தில் நடிப்பதாக ஒரு தரப்பினரும், அடுத்து வரவிருக்கும் 'தபாங்' சீரிசில் பிரீத்தி நடிக்கலாம் என்று இன்னொறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சன்கி' மங்கி அடங்கோ... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஷாருக் - அட்லி!