தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

80'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்: வருத்தம் தெரிவித்த 'பிரதாப் போத்தன்' - நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன்

80கள் காலகட்டத்தில் சினிமா துறையில் கலக்கிய பிரபலங்களின் ரீயூனியன் நிகழ்வுக்கு தன்னை அழைக்காமல் புறக்கணித்தது பற்றி நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Pratap K. Pothen
Pratap K. Pothen

By

Published : Nov 26, 2019, 2:34 PM IST

திரைத்துறையில் 1980களில் நடித்து வெள்ளித்திரை கொண்டாடிவரும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளின் ரீயூனியன் கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

80'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்

இதில், 1980 காலகட்டத்தில் திரையுலகம் கொண்டாடிய பிரபல நடிகர்கள், மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், ஜெயராம், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், பிரபு, ரகுமான், வெங்கடேஷ் மற்றும் நடிகைகள் அமலா, ரேவதி, அம்பிகா, ராதா, சுஹாசினி, ஷோபனா, குஷ்பு, ராதிகா, பூர்ணிமா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் 80'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பிரதாப் போத்தன்

அதில், '80'ஸ் நட்சத்திரங்களுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு இல்லை. சில வேளைகளில் அது நான் ஒரு மோசமான இயக்குநர், நடிகர் என்பதற்காக இருக்கலாம். அதனால்தான் அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் மிகவும் வருந்துகிறேன்.

பிரதாப் போத்தன் ஃபேஸ்புக் பதிவு

என் சினிமா வாழ்க்கை ஒன்றுமல்ல என்பதையே இது குறிக்கிறது. சிலர் நம்மை விரும்புவார்கள், சிலர் வெறுப்பார்கள். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டுதான் இருக்கும்' என பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க...

மக்கள் செல்வனுக்கு பிடித்த அந்த 4 பேர்

ABOUT THE AUTHOR

...view details