பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். ”நாங்க தடுப்பூசி போட்டுக் கொண்டோம், நீங்களும் போட்டுக்கோங்க” எனக் குறிப்பிட்டு தங்களது ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது மனைவி சினேகா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது செய்த குறும்புத்தனமான செயலை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசிக்குப் பயந்த சினேகா... வீடியோ வெளியிட்ட கணவர்! - sneha jab video
நடிகர் பிரசன்னா, தனது மனைவி சினேகா கரோனா தடுப்பூசி போடும்போது செய்த குறும்புத்தனமான செயலை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
சினேகா
அதில் ”நர்ஸ் ஊசி போட வர அவரிடமிருந்து சினேகா தள்ளித் தள்ளிப் போகிறார்” எனவும், ’ஊசி டிராமா’ எனவும் குறிப்பிட்டு சினேகாவை கேலி செய்துள்ளார் பிரசன்னா.
இதையும் படிங்க:'பொன்னியின் செல்வன்' முதல் பாகம்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!