இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.
- படத்தில் ரஜினிக்கு போலீஸ் கதாபாத்திரம்,
- அவருக்கு ஜோடியாக நயன்தாரா
என நாளுக்கு நாள் சர்ப்ரைஸ் செய்தி வெளியாகி ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
துப்பாக்கி, ஐபிஎஸ் அணியும் கால்சட்டை, பெல்ட், நாய் என முற்றிலும் காவல்துறைக்குரிய அடையாளங்களுக்கு நடுவே கூலிங் கிளாஸுடன் ரஜினி சிரிப்பது போன்ற அமைந்திருந்த அந்தப் புகைப்படம் அன்றைய நாளில் இணையத்தில் ஒரு ரவுண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த சர்ப்ரைஸாக சில நாட்களில் ரஜினியின் போலீஸ் லுக் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. சமீபத்தில் வெளியான 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக்கில் கறுப்பு பனியன் அணிந்து தனக்கே உரிய ஆக்ரோஷ பார்வையுடன், கைகள் முறுக்கேறியவாறு ரஜினிகாந்த் வெயிட் லிஃப்ட் எடுப்பதுபோல் இருந்த லுக்கை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் ரஜினி படப்பிடிப்பிலிருந்தபோது குழந்தை நட்சத்திரமும் பாடகியுமான பிரனிதியிடம் வீடியோகால் மூலம் பேசியுள்ளார். இதனை பிரனிதி தனது சமூகவலைதளத்தில் வெளிட்டார். இந்த ட்வீட் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
பிரினிதி 'அருவி', 'சரவணன் இருக்க பயமேன்' போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 'அருவி' படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.