கமல் இயக்கத்தில் விநாயகன், திலீஷ் போத்தன், கேப்ரி ஜோஸ், ரித்தி குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் Pranaya Meenukalude Kadal (பிரணய மீனுகளூடே கடல்). ஜான் பவுல் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: விஷ்ணு பனிக்கர், எடிட்டிங்: சமீர் முகமது.
Pranaya Meenukalude Kadal - மலையாள திரையுலகில் புதிய முயற்சி! - பிரணய மீனுகளூடே கடல்
Pranaya Meenukalude kadal (பிரணய மீனுகளூடே கடல்) படக்குழுவினர் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளனர்.
இந்த படத்தை ஜானி வட்டகுழி தனது டேனி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். அக்டோபர் 4ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர் இதன் புரொமோஷனுக்காக துணியால் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இது மலையாள திரையுலகில் புதிய முயற்சியாகும்.
துணியால் செய்யப்பட்ட ஃப்ளக்ஸுகள், சாதாரண ஃப்ளக்ஸ்களை விட விலை அதிகம். அதேசமயம், சாதாரண ஃப்ளக்ஸ் அளவுக்கு தெளிவாகவும் இருக்காது. எனினும் சுற்றுச்சூழலை பாதிக்கும் சாதாரண ஃப்ளக்ஸ்களை தவிர்க்க இந்த முயற்சியை முதன்முறையாக மேற்கொண்டுள்ளனர். இதற்கு கேரள மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.