தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகனுக்காக மனைவியை மீண்டும் மணம் முடித்த பிரகாஷ் ராஜ் - பிரகாஷ் ராஜ் திருமணம்

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மனைவியை, மகனுக்காக தான் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

By

Published : Aug 25, 2021, 7:43 AM IST

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், 1999ஆம் ஆண்டு வெளியான ’டூயட்’ படம் மூலம் தமிழில்அறிமுகமானார். பாலசந்தர் இயக்கிய இந்தப் படத்தில் பிரபு நாயகனாக நடிக்க, பிரகாஷ் ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் கன்னட திரையுலகில் 1994ஆம் ஆண்டு நுழைந்தபோது மிகவும் சவாலான சூழ்நிலைகளைச் சந்தித்துள்ளார். அப்போது அவருக்குத் துணையாக இருந்த லலிதா குமாரியை அதே ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பிறகு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2009ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவந்தனர். இதனையடுத்து பிரகாஷ் ராஜ் 2010ஆம் ஆண்டு போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நேற்று (ஆகஸ்ட் 24) பிரகாஷ் ராஜ் - போனி வர்மா தம்பதி 11ஆவது திருமண நாளை கொண்டாடினர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மகன் வேதாந்த் தங்களது திருமணத்தை நேரில் காண முடியாததால், மீண்டும் நேற்று அவர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்களை பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details