ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தேவி படத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தனர். அப்போது வந்த பேய் கதைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமாக ரசிக்கும்படியாக இப்படம் இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவான தேவி திரைப்படம் 2016 அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற சல்மார் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.
அய்யய்யோ... பேய் ஒன்னு இல்லை இரண்டு! தேவி-2 டீசர் - THAMANNA
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தேவி-2 திரைப்படத்தின் டீசர் வெளியானது.
அந்த வரிசையில் உருவாகியுள்ள தேவி-2 திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் யோகிபாபு, நந்திதா கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதல் பார்ட்டில் தமன்னா பேயாக நடித்து மிரட்டியிருந்தார். 'தேவி-2'வில் பிரபுதேவா பேயாக நடித்துள்ளார்.
இப்படத்தில் ஒரு பேய் அல்ல இரண்டு பேய் என்று கோவை சரளா கூறும் காட்சிகள் தெறிக்கவைக்கிறது. நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள தேவி-2 ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகிறது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.