நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமான பிரபு தேவா பின்பு நடிகர், இயக்குநர் என புது அவதாரங்கள் எடுத்தார். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து 'தபாங் 3' படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், பிரபு தேவா இயக்குநர் விஎஸ் இயக்கத்தில் 'ஊமைவிழிகள்' என்ற படத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு காஸிப் இசையமைக்கிறார். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.