தமிழ்நாடு

tamil nadu

போலீஸ் யாருக்கு வேலை பார்க்கனும்...வெளியான 'பொன் மாணிக்கவேல்' ட்ரெய்லர்

காவல் துறை அலுவலராக பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள'பொன் மாணிக்கவேல்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

By

Published : Jan 21, 2020, 9:07 PM IST

Published : Jan 21, 2020, 9:07 PM IST

Pon Manickavel
Pon Manickavel

நடிகர் பிரபுதேவா முதன்முறையாக காவல் துறை அலுவலராக நடிக்கும் திரைப்படம் 'பொன் மாணிக்கவேல்'. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும், சுரேஷ் சந்திர மேனன், இயக்குநர் மகேந்திரன், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 'கண்டேன்' படத்தின் இயக்குநர் ஏ.சி.முகிலன் இயக்குகிறார். ஜெபக் நிறுவனம் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொன் மாணிக்கவேல் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா தற்போது தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் வாசிங்க: ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details