தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இரண்டாம் குத்து பட இயக்குநரோடு கூட்டணி போட்ட பிரபுதேவா! - prabhu deva upcoming

சென்னை: இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 15) பூஜையுடன் தொடங்கியது.

பிரபு தேவா
பிரபு தேவா

By

Published : Jul 15, 2021, 3:59 PM IST

'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இவர் அடுத்ததாக பிரபுதேவாவை வைத்து ஒரு முழு கமர்சியல் படத்தை இயக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை இன்று (ஜூலை.15) சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அடுத்தக்கட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வெற்றிமாறன் தயாரிக்கும் படம் குறித்த புதிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details