தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கொரோனா எதிரொலி: மாஸ்க்கோடு வெளிநாடு சென்ற பாகுபலி! - prabhas airport video

பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ் கொரோனா வைரஸ்ஸிலிருந்து தப்புவதற்காக மாஸ்க்கோடு சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

விமான நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற பிரபாஸ்
விமான நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற பிரபாஸ்

By

Published : Mar 5, 2020, 1:15 PM IST

சீனாவில் பரவி உலகையே மிரட்டி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ், தற்போது இந்தியாவிலும் தீவிரமாகப் பரவிவருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மாபெரும் வெற்றியடைந்த பாகுபலி படத்தின் கதாநாயகன் பிரபாஸ் நேற்று இரவு ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஐரோப்பாவிற்கு சென்றார்.

அப்போது கொரோனா வைரஸ்ஸிலிருந்து தப்புவதற்காகவழக்கமாக செல்வது போல் இல்லாமல் மாஸ்க் அணிந்து சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விமான நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற பிரபாஸ்

'சாஹோ' படத்திற்கு பிறகு பிரபாஸ் ராதாகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:ஆயுஷ்மான் குரானாவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த குடும்பத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details