'பாகுபலி', சாஹோ' போன்ற பிரமாண்ட படங்களைத்தொடர்ந்து பிரபாஸ் 'ஜில்' பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'பிரபாஸ் 20' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ், யூவி கிரியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
தற்போது பிரபாஸ் அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் கீர்த்தி சுரேஷை வைத்து 'மகாநடி' படம் இயக்கி மூன்று தேசிய விருதுகளை வென்றவர்.