தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்! - ஷ்ரதா கபூர்

பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்துவருகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபாஸ் ஒரு பதிவிட்டுள்ளார்.

saaho

By

Published : Sep 10, 2019, 12:25 PM IST

Updated : Sep 10, 2019, 1:06 PM IST

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரதா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘சாஹோ’. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பிரபாஸை வைத்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ஜாக்கி ஷெரோப், அருண் விஜய், மந்திரா பேடி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

சாஹோ - பிரபாஸ்

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ’சாஹோ’, கலவையான விமர்சனங்களை சந்தித்துவருகிறது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் படம் பட்டையை கிளப்புகிறது.

10 நாட்களில் ‘சாஹோ’ திரைப்படத்தின் வசூல் ரூ.350 கோடியைத் தாண்டியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபாஸ் ஒரு பதிவிட்டுள்ளார்.

பிரபாஸ் ஃபேஸ்புக் போஸ்ட்

அதில் அவர், “எனது அன்பிற்குரிய ரசிகர்களே, ’சாஹோ’ படத்துக்கு நீங்கள் கொடுத்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. உங்கள் வெளிப்படையான பாராட்டும், ஆதரவும்தான் இந்தப் படம் இத்தனை தூரம் வரக் காரணம். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Sep 10, 2019, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details