தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு: பிரபாஸ்!

'சாஹோ' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று கூறி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளார்.

prabhas

By

Published : Aug 17, 2019, 6:46 AM IST

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸின் 'சாஹோ' திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் பிரபலம் ஷ்ரதா கபூர் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபாஸ், ஷ்ரதா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், தமிழ்நாட்டு மக்களுக்கு 23ஆம் தேதி சர்ப்ரைஸ் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் இதை அறிவித்த பிறகு ரசிகர்களுக்கு படம் குறித்தான ஆர்வம் அதிகமாகியுள்ளது.

உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு: பிரபாஸ்!

ABOUT THE AUTHOR

...view details