'சாஹோ' திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'ராதே ஷ்யாம்'. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாகப் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது.