தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ராதே ஷ்யாம்' - பிரபாஸின் ரொமான்டிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - radhe shyam

பிரபாஸின் 20ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Prabhas
Prabhas

By

Published : Jul 10, 2020, 2:30 PM IST

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான 'சாஹோ' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் கமிட்டான திரைப்படம் தான் 'பிரபாஸ் 20'.

இத்திரைப்படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடி இன்று(ஜூலை 10) அப்படத்தின் போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

'ராதே ஷ்யாம்' என்று படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள, அப்போஸ்டரில் பிரபாஸும், பூஜா ஹெக்டேவும் ரொமான்டிக்காக நின்று போஸ் கொடுத்துள்ளனர். மிகவும் கலர் ஃபுல்லாக வெளியாகியுள்ள 'ராதே ஷ்யாம்' போஸ்டர் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் தயாராகி வருகிறது. ராதே ஷ்யாம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொடங்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details