’பாகுபலி’ படத்துக்குப் பிறகு அதிகமான ரசிகர்களைப் பெற்ற பிரபாஸ், தனது ‘சாஹோ’ படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால் பிரபாஸின் மகிழ்ச்சி நீடிக்க முடியாத காரியம் ஒன்றை அவரது ரசிகர் ஒருவர் செய்துள்ளார்.
பிரபாஸ் பார்க்கலைனா குதிச்சு செத்துருவேன் - மிரட்டிய ரசிகர்! - பிரபாஸ் ரசிகர் மிரட்டல்
டோலிவுட் ரெபல் ஸ்டார் பிரபாஸின் ரசிகர் ஒருவர் செல்போன் டவரில் இருந்து குதிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா ஜங்கத்தை சேர்ந்த பிரபாஸ் ரசிகர் ஒருவர், செல்போன் டவர் மீது ஏறி உடனடியாக பிரபாஸை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். இதைப் பார்த்து அங்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது. அங்கிருந்தவர்கள் பிரபாஸை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அவரை சமாதானம் செய்துள்ளனர். அதன்பிறகு அவர் டவரில் இருந்து இறங்கி வந்தார். இதுகுறித்து பிரபாஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதா என தெரியவில்லை.
முன்னதாக ‘சாஹோ’ படத்துக்கு பேனர் வைத்த ரசிகர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் இதுபோன்ற கதாநாயக வழிபாட்டால் இறந்த ரசிகர்கள் ஏராளம்.