'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸின் சம்பளம் உயர தொடங்கியுள்ளது. இந்தியில் தற்போது உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' படத்திற்கு பிரபாஸுக்கு ஊதியம் ரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பாலிவுட்டில் ரூ. 100 கோடிக்கு மேல் ஊதியம் பெறும் நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார், சல்மானுக்கு பின் பிரபாஸ் இணைந்துள்ளார். இதையடுத்து இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெறும் முதல் தென்னிந்திய நடிகர் என்னும் பெருமையை பிரபாஸ் பெற்றுள்ளார்.