'பாகுபாலி' திரைப்படத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவர் பிரபாஸ். தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் இவரது சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியா திரைப்படங்களாக உருவாகின்றன.
இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. இதில் பிரபாஸின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது முடியில் 'Prabhas' என்ற ஆங்கில சொல்லில் ஸ்டைலாக டிசைன் செய்துள்ளார். இதனை அறிந்த பிரபாஸ் அவரை அழைத்துச் சந்தித்துப் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.