ஹைதராபாத்: பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படக்குழுவினர், தங்கள் செட்டிலிருந்த பொருள்களை தனியார் மருத்துவமனைக்கு கொடுத்து உதவியுள்ளனர்.
கரோனா நிவாரணம்: தனியார் மருத்துவமனைக்கு உதவிய பிரபாஸ் படக்குழு
50 படுக்கைகள், பிபிஇ உடை, மருத்துவ சாதனங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என பல்வேறு உபகரணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு படக்குழு அளித்துள்ளது.
70-களில் இத்தாலியில் இருந்த மருத்துவமனை போன்ற செட்டுகள் பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படத்துக்காக அமைக்கப்பட்டது. 50 படுக்கைகள், பிபிஇ உடை, மருத்துவ சாதனங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என பல்வேறு உபகரணங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு படக்குழு அளித்துள்ளது. 9 ட்ரக்குகளில் இந்த பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு குழுவை சேர்ந்த ரவீந்தர் ரெட்டி, இந்தப் பொருள்கள் கரோனா சூழலில் மிகுந்த உதவியாக இருக்கும். எனது உறவினர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்க படுக்கை கேட்டபோது, படுக்கை தீர்ந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பாக படக்குழுவினரிடம் பேசினேன். அவர்கள் ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்ட பொருள்களை வழங்க உடனடியாக சம்மதம் தெரிவித்தனர் என்றார்.