'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது பூஜா ஹெக்டேவுடன் 'ராதே ஷியாம்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்தையடுத்து பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆதிபுருஷ்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்த படங்களை தொடர்ந்து பிரபாஸ், ‘நடிகையர் திலகம்’ படப் புகழ் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் 'பிராபஸ் 21' நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.