தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மூன்று படங்கள்; 1,000 கோடி ரூபாய் பட்ஜெட் - வசூல் சாதனை படைப்பாரா பிரபாஸ் - சலார்

ராதே ஷியாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார்; கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்தையும், இயக்குநர் ஓம் ராவுத் ‘ஆதிபுருஷ்’ படத்தையும் இயக்குகின்றனர்.

Prabhas become the king of box office in 2022
Prabhas become the king of box office in 2022

By

Published : Jul 31, 2021, 7:38 PM IST

பிரபாஸ் நடிப்பில் அடுத்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இந்த மூன்று படங்களின் பட்ஜெட் 1,000 கோடி ரூபாய் ஆகும். அத்தனை படங்களும் நன்றாக ஓடினால், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்கள் பிரபாஸ் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகும் என திரைத்துறை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படங்கள் அனைத்தும் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. மொத்தமாக 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படங்கள், 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யும் என திரை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ராதே ஷியாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார்; கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் ‘சலார்’ படத்தையும், இயக்குநர் ஓம் ராவுத் ‘ஆதிபுருஷ்’ படத்தையும் இயக்குகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸ் மாஸ் காட்டுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:லதா ரஜினிகாந்த் வாழ்த்து: மகிழ்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா

ABOUT THE AUTHOR

...view details