மத்திய அரசு சமீபத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜானி சின்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு, ' இவர் காஷ்மீர் அனந்த்நாக் பகுதியைச் சோ்ந்த யூசுப். பெல்லட் குண்டுகளால் தன் கண்பார்வையை இழந்தவர். இவருக்காக குரல் கொடுங்கள்' என்று பதிவிட்டார்.
இந்தப் பதிவையடுத்து, 'சிறுத்தை சிக்கிடுச்சு மொமென்ட்' என எண்ணிக்கொண்டு நெட்டிசன்கள் ட்ரோலும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தனர். பின் தன் தவற்றை உணர்ந்த, அப்துல் பாசித் தனது பதிவை நீக்கி விட்டார்.
இந்நிலையில், ஜானி சின்ஸ் தன்னை பிரபலப்படுத்திய பாகிஸ்தான் தூதருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் முத்தாய்ப்பாக தனது பார்வை நன்றாக இருப்பதாகவும் ஜானி சின்ஸ், அப்துல் பாசித்தை பஞ்ச் வைத்து கலாய்த்துள்ளார். இது அனைவர் மத்தியிலும் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.